தமிழில் இஸ்லாமிய கட்டுரைகளைப் பெயர்த்து இங்கு பதிவிடுதலே என் நோக்கு. இதன் மூலம் இஸ்லாம் பற்றிய கூடுதல் விளக்கத்தை வாசகரிடத்தில் ஏற்படுத்தலும் எனது எண்ணம். அதே வேலை,அல்லாஹ்வின் அருளையும் திருப்தியையும் பெற்ற அடியானாக இச்சிரு முயற்சி நம்மை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
அல்லாஹ் தஆலா அல்குர் ஆனில் பின்வறுமாறு கூறுகிறான்.
"ஜின்களையும் மனிதர்களையும் என்னை வழிபட்டு வணங்கவே அல்லாமல் நான் படைக்கவில்லை."(51:56)alquran
ஆகவே நாங்கள் படைக்கப்பட்ட நோக்கம் நம்மைப் படைத்த இறைவன் மூலமாகவே தெளிவு படுத்தப்பட்டிருக்கையில் ,நம் பிறப்பின் நோக்கம் நம்மால் புறக்கனிக்கப்படுதல் பாவகாரியத்துக்கிட்டுச் செல்வது மட்டுமல்ல அறிவு கொடுக்கப்பட்டும் அலட்சியப்படுத்துபவர்களுக்குள் நம்மை ஆக்கிவிடலாம்.(அல்லாஹ் நம்மை அந்த நிலையிலிருந்து காத்தருளட்டும் ஆமீன்.)